Menu

Tuesday, 7 November 2017

நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....( tamil novel ) chapter 04

 நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....     chapter 04

மெல்ல தன் மனமும் , உடலும் அவனை சுற்றி நிலவிய இனிய சூழல் தந்த இதத்தில் மூழ்க இந்த இரவுப்பொழுது இன்னும் பல நாள் நீடிக்க வேண்டினான். ஆனால் அவன் எண்ணம் அதிக நேரம் நீடிக்கவில்லை. கடலும்வானமும் ஒரே கருமை இருலில் கலந்த போது மறைந்த தொடுவானத்தின் இடது ஓரத்தில் ஒரு சின்ன சிவப்பு பொட்டு போல் ஒரு வெளிச்சம் தோன்றியது. விரைவில் அது கரையை நோக்கி மெல்ல நகர்ந்ததது . வானமும் பூமியும் பிளப்பது போல் அதன் பிரகாசம் மெல்ல அதிகரிக்க  தான் இருக்கும் கரை நோக்கி வேகத்துடன் வந்தது. முதலில் கடலில் ஏதோ கப்பல் என்று நினைத்தவன் கரைஇறங்க தடை உள்ள இந்த கரை பகுதியை தேடிவர இது ஏதும் சட்ட விரோத செயலை சார்ந்ததாக இருக்குமோ என திகைத்தான்.  எதுவாக இருந்த போதிலும் அவை எதையும் தான் பொருட்படுத்த போவதில்லை என்ற தீர்மானத்துடன் அவன் அமைதிக்கு பங்கம் செய்த அந்த சிவப்பு ஒளியை கண்கள் சுருக்கி பார்த்தான்.

வெகுவிரைவில்  அந்த சிவப்பு விளக்கு ஒரு சிறிய படகுகில் இருந்து வருவதையும் , அந்த படகு கலங்கரை விளக்கொளி இல்லாத காரணத்தால் கரை தேடி இடமும் வலமும் அலைகளைப்பு கொண்டு இருப்பதையும் கண்டான். படகை சரியான படி செலுத்த படாத பாடு படுவதை அறிந்தவன் எப்படியும் அலைகளே அந்த படகை கரை கொண்டு சேர்த்துவிடும் என்று சலனப்படாமல் இருந்தான். அருகே வர அந்த சிவப்பு விளக்கு திடீர் என்று மறைந்தது. அந்த கருங்கடலில் மாயமாக அந்த படகும் மறைந்து போனது. மீண்டும் பழைய அமைதி திரும்ப என்ன தான் நடக்கிறதோ என்ற ஆவல் பொங்கியது அவனுக்கு. உடனே எழுந்து தன் மீது பதிந்த கடல் மண்ணை தட்டி விட்டு அலைகடலினுல் முங்கி தன்னை பின்தள்ளிய அலைகளை விலக்கிய படி சிறிது நீந்தி சென்றான். இப்போது கடல் நீர் மிகவும் குளிர்ந்து இருந்தது அதனுடன் இந்த வாடை காற்றும் வீச அவனுக்கு குளிறெடுக்க தொடங்கியது. சுற்றும் முற்றும் எதுவும் கண்படாததால் மீண்டும் கரை திரும்ப நிணைத்தான். அப்போது பத்தடி தொலைவில் திடீர் என்று  அந்த படகின் சிவப்பு விளக்கு எரிய மந்திரம் போட்டது போல் அந்த படகு அவன் கண்முன் தோன்றியது.

அரை நொடியில் அந்த சின்ன சிவப்பு விளக்கு சட்டென மறைந்தது. இருந்தும் சற்று அருகில் தான் என்பதால் படகில் யாரோ ஒருவன் மட்டுமே இருப்பதை அவனால் கவனிக்க முடிந்தது. அது ஒரு கைகளால் துடுப்பு போட்டு ஓட்ட வேண்டிய சிறிய படகு. அலைகள் அந்த படகை உரசும் சத்தம் அது இப்போது கரை பக்கமாக வராமல் கடல் நோக்கி செல்வதாக அவனுக்கு தோன்றியது. துடுப்பை போடாது படகு அலை அடிக்க திசை வேறாக செல்வதை உணா்ந்தான். ஏதோ உதவி அவசியம் என்று புரிந்தவனாய் படகை நோக்கி விரைந்து நீந்தினான். குளிர்ந்த தேகம் எங்கும் அவன் நீந்திய வேகத்தில் ரத்தத்தின் சூடு பரவ சில வினாடியில் படகை அடைந்தான். கைகளால் அதன் ஓரத்தை பற்றி இழுக்க அவன் பாரம் தாங்காமல் படக்கென்று சாய்ந்தது படகு. உள்ளே இருப்பவா் படகுடன் சேர்ந்து தானும் திடும் என்று சாய அந்த ஆள் தலையில் அடிப்பட்டதை போல் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தான். உடனே தாவி கால்களை உள்ளே போட்டவன் மூச்சிரைக்க ஒரு நொடி முகத்தை கைகளால் துடைத்து இதுவரை கடல் உப்பு நீர் கரிப்பில் எரிச்சல் கொண்ட நாக்கும் , கண்களும் கொஞ்சம் தெளிவு பெற கீழே கிடந்த அந்த ஆளை தூக்கி அமரசெய்தான். ஏதோ ராணுவ சீருடை போல் கெட்டியான அடர்நிறத்தில் முழு ஆடை கடல் நீரால் நனைந்து குளிர் உற்றது போல் தோன்றிய அந்த ஆள் மெல்லிய உடல் கொண்டது போல் இருந்தான். தன் இரு கைகள் கொண்டு தூக்க பஞ்சு போல் இலகுவாக இருப்பதால் அது ஒரு பெண்ணாக இருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.


to be continued...

Featured Post

நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....( tamil novel ) chapter 39

chapter : 39 சிமி, மதனை பார்த்த பார்வை, அவன் இதயத்தில் கத்தி போல் இறங்கியது. தான் எவ்வளவோ பேசியும், பதில் பேசாதவள் ஒரே பார்வ...

Most popular posts